கதிர்காமத்தில் இருந்து பயணிகளுடன் அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற பேருந்து கோமாரி பிரதேசத்தில் இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி மின்கப்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் .
பொத்துவில் இ.போ. சபைக்கு சொந்தமான பஸ் வண்டி கதிர்காமத்திலிருந்து பயணிகளுடன் அக்கரைப்பற்றுக்கு சென்றபோது இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோமாரி முருகன் ஆலயத்திற்கு முன்னால் வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் சாரதியும் சிறுமி ஒருவொரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.