Contact Form

Name

Email *

Message *

கதிர்காமத்திற்கு சென்ற தம்பிலுவிலை சேர்ந்த பெண்ணை புலி தாக்கியதில் பரிதாப மரணம்

மிகவும் வேதனைக்குரிய சம்பவம் ... உகந்தையில் இருந்து கதிர்காமத்துக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்த  தம்பிலுவிலை சேர்ந்த  ஒருவர் இன்று அதிகாலை புலியின் தாக்குதலில் உயிரிழந…

Image
மிகவும் வேதனைக்குரிய சம்பவம் ...

உகந்தையில் இருந்து கதிர்காமத்துக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்த தம்பிலுவிலை சேர்ந்த  ஒருவர் இன்று அதிகாலை புலியின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.  .

பலியானவர் 31 வயதான தம்பிலுவில் வீ.சி றோட்டை சேர்ந்த  கிருஸ்ணபிள்ளை சந்திரகுமாரி என்ற இரு பிள்ளையின் தாயாரே உயிரிழந்துள்ளார். 

வியாலை காட்டுப் பகுதிக்கு சென்ற வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்சமயம் யால தல்கஸ்மங்கட மற்றும் கொஸ்கஸ்மங்கட பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.


அதிகாலை தனிமையில் சென்றபோது அப்பகுதியில் பதுங்கிருந்த புலி இவர் மீது பாய்ந்து தாக்கியுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
திருக்கோவில் பிரதேச செயகலத்தில் கடமையாற்றும் இவர் தனது குடும்பதினருடன் கதிர்காமத்துக்கு கால்நடையாக பாதையாத்திரை சென்ற நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் சம்பவ இடத்துக்கு சென்ற பாணமை விசேட அதிரடிப்படையினர் மற்றும் வன இலகா பிரிவினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளதுடன் சடலத்தை கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.



இந்த சம்பவத்தால் ஊர் மக்கள் மிகவும் கவலையில் உள்ளனர்
அன்னாரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்

You may like these posts