Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் திருகோவிலில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற 32 பேர் கைது!

திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பாவித்த 32 பேரை இன்று அதிகாலை இலங்கை மின்சார சபையின் தலைமைக் காரியாலய விசேட குழுவினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளத…

Image
திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பாவித்த 32 பேரை இன்று அதிகாலை இலங்கை மின்சார சபையின் தலைமைக் காரியாலய விசேட குழுவினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருக்கோவில் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள விநாயகபுரம், தம்பிலுவில், தம்பட்டை திருக்கோவில் போன்ற பிரதேசங்ளை இன்று அதிகாலை 4 மணிக்கு பொலிஸாருடன் இணைந்து சுற்றி வளைத்து சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பாவித்த 32 பேரை கைது செய்ததுடன் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற வயர்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You may like these posts

Comments