
திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழுள்ள 73 முன்பள்ளிகள் வெள்ளஅனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வலயக்கல்வி முன்பள்ளி பாதுகாப்பு அபிவிருத்தி இணைப்பாளர் எஸ். தர்மபாலன் தெரிவித்துள்ளார்.
அனர்த்தத்தினால் ஆலையடிவேம்பு,திருக்கோவில்,பொத்துவில் ஆகிய கோட்டக்கல்வி பணிமனையின்கீழ் உள்ள இவ் 73 முன்பள்ளிகளின் கற்றல்,கற்பித்தல் உபகரணங்கள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல முன்பள்ளிகளின் கட்டிடங்கள் முன்பள்ளிகளின் சூழலில்உள்ள விளையாட்டு உபகரணங்கள் போன்றவை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முன்பள்ளிகளில் உள்ள குடிநீர் கிணறுகளிலிருந்து குடிநீருக்காக பாவிக்க முடியாதுள்ளதாகவும் அதேபோன்று மலசலகூடங்கள் நிரம்பியுள்ளதால் பாவிக்கமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.முன்பள்ளி சிறுவர்களுக்கு கொதித்தாறிய நீரை வழங்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தல்வழங்கப்பட்டுள்ளதாக முன்பள்ளி இணைப்பாளர் எஸ். தர்மபாலன் தெரிவித்தார்
People Of Thambiluvil & Thirukkovil
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!