Contact Form

Name

Email *

Message *

மரண அறிவித்தல் - அமரர். இராமையா இராஜேஸ்வரி

மரண அறிவித்தல் - அமரர்.  இராமையா இராஜேஸ்வரி மலர்வு - 1937.06.22          உதிர்வு -  2020.12.26

Image

 மரண அறிவித்தல் -

அமரர். இராமையா இராஜேஸ்வரி



மலர்வு -1937.06.22         உதிர்வு - 2020.12.26


தம்பிலுவில் -2 ஐ பிறப்பிடமாகவும் , வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி . இராமையா இராஜேஸ்வரி அவர்கள் இன்று (26.12.2020) காலமானார். இவர் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும் , வசந்தமலர் புவனேஸ்வரி ( ஆசிரியை ) இராஜேஸ்பரன் ( பாதுகாப்பு உத்திதியோகஸ்தர் HNB பொத்துவில ) ஆகியோரின் அன்புத் தாயாரும் , நோமன் அன்ரன் ( ஓய்வு பெற்ற தொழிநுட்ப உத்தியோகிஸ்தர் , அன்ரன் ஸ்ரோர்ஸ் உரிமையாளர் ) திருமதி.தவமணிதேவி இராஜேஸ்பரன் ( ஆசிரியை , திகோ / விநாயகபுரம் கரிஷ்ட வித்தியாலயம் ) ஆகியோரின் அன்பு மாமியாரும் காலம் சென்ற கோவேந்தன் ( தொழிநுட்ப உத்தி யோகிஸ்தர் , வீடமைப்பு அதிகாரசபை , லோஜன் ( RN CD Home உரிமையாளர் ) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் , அனிஷாவின் அப்பம்மாவும் ஆவார் .  

அனுரங்கா , சஞ்ஜிகா ஆகியோரின் பாட்டியும் , நாலெட்சுமி , காலம் சென்றவர்களான திருஞானமூர்த்தி ( ஓய்வு பெற்ற களஞ்சியகாப்பாளர் ( MPES)) , கணேசமூர்த்தி ( ஓய்வு பெற்ற அதிபர் ) , பத்மாவதி , சுகானந்தமூர்த்தி ( ஓய்வு பெற்ற களஞ்சியகாப்பாளர் ( MPES ) அக்கரைப்பற்று தெற்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் ) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.


காலம் சென்றவர்களான தங்கராசா குகதாஸ் ( ஓய்வு பெற்ற கிளை முகாமையாளர் ( MPES ) ) , சோதிமலர் கலாநிதி ஹேமலதா , மோட்சவதி ( ஓய்வு பெற்ற கிளை முகாமையாளர் , அக்கரைப்பற்று தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் ) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார் . 

இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் .

 தகவல் குடும்பத்தினர்
 V.C வீதி, தம்பிலுவில் - 02.





அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் .கொம்  (thambiluvil.com ) இணையக்குழு சார்பா எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.

You may like these posts

Comments