[Photos- JK Jathu]

திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான யானை வேலி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் மற்றும் களவிஜய நிகழ்வு 2020.11.19 திகதி நேற்றையதினம் திருக்கோவில் பிரதேச செயலாளர் T.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.


மேலும் இதன் போது திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் R.Wகமலராஜன் மற்றும்
பிரதேச செயலகத்தின் காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள்,  கிராம சேவகர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.