
(திருக்கோவில் நிருபர்-ASK)
தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கான தைப்பொங்கல் விழா நிகழ்வு - 2019
மதங்களுக்கிடையிலும், கலாசாரங்களுக்கிடைலுமான விழாக்களை கூட்டாகக் கொண்டாடுவோம் எனும் தொனிப் பொருளில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் ஊடாக திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தினால் சர்வமத பங்கேற்புடன் தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இவ் தைப்பொங்கல் விழாவானது திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் தலைமையில் தாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை காலை (07) கொண்டாடப்பட்டது.
இங்கு பொங்கல் பொங்கி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் பாரம்பரியமான பொருட்களின் கண்காட்சிகளும் இடமபெற்றதைத் தொடர்ந்த தைப்பொங்கல் தொடர்பான பாடசாலை மாணவர்களின் சர்வமத கலை,கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன.
நிகழ்வில் வரவேற்பு உரையினை வலயக் கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் நிகழ்த்தியதுடன் தைப்பொங்கல் தோற்றம் அதன் வரலாறு தொடர்பாக விசேட உரையினை திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் நிகழ்த்தியிருந்தார்.
இந்நிகழ்வின் போது ஆன்மீக அதிதிகளாக தமிழ்,சிங்கள,முஸ்லிம் மற்றும் கிருஸ்தவ மதகுருமார்கள் கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் கலந்து கொண்டிருந்ததோடு திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக்க உதயங்க மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் பிரதேசக் கல்விப் பணிப்பாளர்கள் வங்கி முகாமையாளர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள் கலைஞர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.