இதற்கமைய திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட திகோ/ தம்பட்டை மகா வித்தியாலயத்திலும் இப் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்வும், மற்றும் பாடசாலையினை அண்டிய வெளி சமூகத்தினரினை விழிப்பூட்டும் ஊர்வல நிகழ்வு ஒன்றும் 2019.01.25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இன்று வித்தியாலய அதிபர் சீ. சிவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இவ்வாரத்தில் தினமும் ஒவ்வொரு துறைசார் அதிகாரிகளால் மாணவர்களுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் இறுதிநாளான இன்று போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக ஊடகங்களின் பங்களிப்பு தொடர்பாக தெளிவூட்டல்களை வழங்க வற்றிநியுஸ் (battinews.com) இணையத்தளம் சார்பாக ஊடவியலாளரான திரு. ஆர்.நர்த்தனன் அவர்கள் கலந்து மேலும் இந்நிகழ்வில் திருக்கோவில் போலீஸ் நிலைய போலிஸ் சாஜன் திரு.கே.குணசேகரம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.