இவ் ஆலமரம் பொத்தவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில் குறுக்காக விழுந்துள்ளதன் காரணமாக பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்ததுடன் பிரதேசத்திற்கான மின்சார் தடைப்பட்டுள்ளதுடன்; கமநல சேவை அலுவலக சுற்றுமதில் மற்றும் சிறிய கட்டடமும் சேதடைந்துள்ளது.
இதனையடுத்து திருக்கோவில் பிரதேச சபை உதவி தவிசாளர் எஸ்.விக்கினேஸ்வரன், திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.கே. பண்டார, கிராம சேவகர், அனர்ந்த முகாமைத்துவ உத்தியோகத்தர் மற்றும் இராணுவம் போன்றோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து இராணுவம், பொது மக்கள் இணைந்து பிரதான விதியில் விழுந்த ஆல மரதத்தினை அகற்றி போக்குவரத்தினை சீர் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.