
கிழக்கிலங்கை திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகமானது எதிர்வரும் 2018.06.25 திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
இக் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு வெளியாக உள்ள கும்பாபிஷேகம் பாடல்கள் மற்றும் கந்தன் காவியம் அடங்கிய இரண்டு இறுவெட்டு வெளியீடு நிகழ்வானது திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய நாளை 2018.06.24 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 - 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளது
இவ் இறுவெட்டில் இதற்க்கான பாடல்வரிகளை எஸ்.பி.கனகசபாபதி, இரா தேவராஜன், கோவிலூர் செல்வராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்திய பாடகர்களான அனுராதா ஸ்ரீராம் மற்றும் தேவா மற்றும் கிருஷ்ணராஜ், அனந்த், குரு, சோபியா ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர் .
மேலும் கந்தன் காவியம் இருவேட்டிடன் பாடல்வரிகளை இரா.தேவராஜன் அவர்ககள் எழுதியுள்ளார். மற்றும் இதன் காவிய பாடலினை சஹானா மாறும் இரா.தேவராஜன் ஆகியோர் பாடியுள்ளனர்.
அனைவரும் வருக......