2015ல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு, திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதால், எழுந்தருளிகள் வீதி உலாச் சுற்றும் திருவிழா நடைபெறாது. கொடியேற்றம், கொடியிறக்கம், தீர்த்தம் என்பன நடைபெறா விட்டாலும் வேதாகம விதிமுறைகளுக்கு அமைவாக விசேட பூசை வழிபாடுகளும் அடியார்கள் பிதிர்க்கடன் நிறைவேற்றுவதற்கான வசதிகளும் கடந்த வருடத்தினைப் போன்று ஒழுங்கு செய்யப்படடுள்ளன. விழாவுக்கான அலங்கார வேலைப்பாடுகள், ஆலயத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கின்றன.
ஆடி அமாவாசை பெருவிழா - 2017 முன்னிட்டு, எமது திருக்கோவில் பிரதேச மக்களின் இணைய தளமான www.thambiluvil.info இணையக்குழுவினால் வடிவமைக்கப்பட்ட விசேட புகைப்படத்துடன் நீங்கள் உங்களுக்கு விரும்பிய புகைப்படத்தை இணைத்து உங்கள்
முகநூல் முகப்புப்படமாக மாற்றியமைக்க முடியும்.
இதனை உங்க முகப்புத்தகத்தில் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களிலும் பகிரமுடியும். இங்கே கிளிக் செய்து இந்த மாற்றத்தைச் செய்யலாம்.
கிளிக் செய்யவேண்டிய இணைப்பு: https://actionsprout.io/0F0FB4
மாதிரிப்புகைப்படம்






Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!