Contact Form

Name

Email *

Message *

இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயத்திரி கிராமம் 13 ஆம் வீதியில் வைத்து இளைஞன் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Image
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயத்திரி கிராமம் 13 ஆம் வீதியில் வைத்து இளைஞன் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் முன்வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து சகோதரியுடன் காயத்திரி கிராமத்தில் உள்ள மரண வீடு ஒன்றுக்கு சென்ற போதே வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து காயமடைந்த இளைஞன் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இளைஞனின் முகம், கை மற்றும் இடுப்பு பகுதிகளில் வெட்டு காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞன் திருக்கோவில் 1ஆம் குறிச்சைச் சேர்ந்த 22வயதுடைய யோ.வதனராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may like these posts

Comments