அருள்மிகு உகந்தமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தான ஆனி உத்தர நவோத்தர சஹஸ்ர (1009) சங்காபிஷேக நிகழ்வானது எதிர்வரும் 29.06.2017 திகதி வியாழக்கிழமை மாலை பூசையைத் தொடர்ந்து கருமாரம்பம், விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், அனுஞ்யை, வாஸ்து சாந்தி முதலிய கிரியைகளுடன் சங்காபிஷேக நிகழ்வு ஆரம்பமாகும்.மறுநாள் 30.06.2017 திகதி வெள்ளிக்கிழமை காலை பூசையை தொடர்ந்து விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், யாகமண்டப பூசை, வேதிகா அர்ச்சனை, சங்குப்பூசை, அக்னி கார்யம், விசேட திரவியஹோமம், பூர்ணாகுதி- தீபாராதனை, வேததோத்திரபாராயணம்- திருமுறைப்பாரயணம், பிரதான கும்ப வீதி உலாவினை தொடர்ந்து பகல் மணியளவில் 1009 வலம்புரி சங்குகளை கொண்டு நவோத்தர சஹஸ்ர சங்காபிஷேக நிகழ்வானது இடம்பெறும்.
தொடர்ந்து மூலவர் பூசை, வசந்தமண்டப பூசை சுவாமி உள்வீதி உலாவருதல் இடம்பெற்று சங்காபிஷேக நிகழ்வு நிறைவு பெறும். இக்கிரியைகள் யாவும் ஆலய பிரதமகுரு, சிவாகம கிரியாயோதி, ஆகமப்பிரவீணா, சித்தாந்தஞானபானு, ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ. க.கு.சீதாராம் குருக்கள் அவர்களின் தலைமையில் நடைபெறும்.
மேலும் இதன்போது விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!