
இன்று 27.02.2017 திங்கட்கிழமை மாலை சுமார் 3.30 மணியளவில் ஐந்து(5) யானைகள் தம்பிலுவில் முனையூர் கிராமத்தின் முனையூர் ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் ஆலயத்தினை அண்டிய முனைக்கட்டு பகுதியிலே இவ்வாறு யானைகள் ஊரினுள் ஊடுருவியுள்ளது.
இவ் யானைகள் நீர் அருந்துவதற்காக ஆத்துக்கண்டம் என அழைக்கப்படும் வயல் பிரதேசத்தில் இருந்து தம்பிலுவில் முனையூர் பெரிய களப்பினை ஊடறுத்து முனையூர் கிராமத்தின் முனைக்கட்டு பகுதியான வயல் பகுதிக்கு வந்து மீண்டும் ஆத்துக்கண்டம் பகுதிக்கே சென்றுவிட்டன. இவ் யானைகளினால் வயல் நிலங்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!