
இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் கடந்த 04.02.2017 சனிக்கிழமை அன்று திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெகராஜன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இச்சுதந்திர தின நிகழ்வானது தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமாகி தேசிய கீதம் இசைக்கப்பட்டு அனைவரினாலும் மரியாதை செலுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய பிரதேச செயலாளர் "எமது நாட்டின் பன்முக அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு நாட்டு மக்கள் செயற்பட வேண்டும் என்பதோடு, புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகள் எம்மால் பலதுறைகளில் எட்டமுடியாமலே போயுள்ளன. அதேபோல் 2020ம் ஆண்டு முதல் 2030ம் ஆண்டுவரை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலைபேறான அபிவிருத்தியை நோக்காக கொண்டு அரச உத்தியோகத்தர்களாகிய நாம் பொதுமக்களுக்கு எமது சேவைகளை வழங்க வேண்டும் எனவும் மேலும் ,
குறுகிய கால இலாபங்களான பிரதேச வாதம், இன வாதம் என்பனவற்றை மறந்து இலங்கை சுதந்திர போராட்ட வீரர்கள் இலக்கை நிர்ணயித்து செயற்பட்டதை போன்று நாம் பேதங்களை மறந்து ஒரே இலக்குடன் நாட்டின் அபிவிருத்தியை நோக்காக கொண்டு செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தர்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!