[Photos: Rajarethnam & Vinoth ]திருக்கோவில் பிரதேச செயலார் பிரிவுக்கு உட்பட்ட மூன்று அறநெறி பாடசாலைகளுக்கான தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 31.01.2016 வெள்ளி அன்று திருக்கோவில் பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு.சி.ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தாண்டியடி விக்னேஸ்வரா அறநெறி பாடசாலை, விநாயகபுரம் முத்துமாரி அறநெறி பாடசாலை, விநாயகபுரம் சக்தி அறநெறி பாடசாலைகளுக்கான தளபாடங்கள் வழங்கபட்டன.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், கலாசார உத்தியோகத்தர், திருக்கோவில் அறநெறி பாடசாலைகளுக்கான இணைப்பாளர், அறநெறி பாடசாலைகளுக்கான பொறுப்பாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!