
கிழக்கு மாகாணத்தில் தொடர்சியாக பெய்துவரும் அடைமழையை அடுத்து திருக்கோவில் பிரதேசத்திலும் கடந்த 22.01.2017 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 24.01.2017 இன்று செவ்வாய்க்கிழமை வரை பெய்து தொடர்ச்சியான அடைமழை காரணமாக திருக்கோவில் பிரதேசத்தில் பல பகுதிகளில் வீதிகள், வீடுகள், மழை நீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இத் தொடர்ச்சியான மழை காரணமாக திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட திகோ/ விநாயகபுரம் சக்தி வித்தியாலயத்தின் பாடசாலை வளாகத்தினுள்ளும் மற்றும் ஒரு சில வகுப்பறையினுள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. இதனை அடுத்து இன்று காலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து இவ் வெள்ள நீரினை வெளியேற்றினர். இதனை தொடர்த்து பாடசாலையின் செயற்பாடுகள் வழமைபோல் ஆரம்பமானது.
எனினும் இப்பொழுதும் தொடர்ச்சியாக மழை பெய்துவருகின்றது குறிப்பிடத்தக்கது.










Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!