தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இல்லங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டி 2017.01.23 திங்கள்கிழமை இன்று இடம்பெற்றது. இப் போட்டியினை மத்திய கல்லூரியின் அதிபர் திரு.வ.ஜயந்தன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.அந்த வகையில் முதலாவது போட்டியில் வள்ளுவர் இல்லம் மற்றும் இளங்கோ இல்லம் ஆகியன மோதிக்கொண்டன.
போட்டி காலநிலை சீர்கேடு மழை காரணமாக பெனால்டி முறைக்கு விடப்பட்டது. இதன் அடிப்படையில் பெனால்டி முறையில் இளங்கோ இல்லம் வள்ளுவர் இல்லத்தை 4 : 2 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்று அடுத்த போட்டிக்கு தெரிவானது.
இதனை தொடர்ந்து தொடர்ச்சியான மழை காரணமாக அடுத்த போட்டி இடம்பெறவில்லை. அடித்த போட்டி செவ்வாய்க்கிழமை நாளைய இடம்பெறவுள்ளது இப்போட்டியில் கம்பர் மற்றும் இளங்கோ இல்லங்கள் மோதவுள்ளன.



Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!