தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மற்றும் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தேசிய பாடசாலையில் கடந்தவருடம் 2016ல் க.பொ.த சாதார பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கான உயர்தரத்தில் எவ்வாறான பாடத்தினை தெரிவு செய்தல் மற்றும் மாணவர்களுக்கு பாடசாலையில் இடம்பெறும் பிரத்தியோக மாலை நேர வகுப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் கடந்த 05.01.2017 வியாழன் அன்று தேசிய பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திரு.வ.ஜயந்தன் தலைமையில் இடம்பெற்றது.இக் கலந்துரையாடல் நிகழ்வில் அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும், தேசிய பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் திரு தமிழ்வேந்தன் மற்றும் அதிபர் திரு,எம்.அன்ரன் மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் திரு.ஜீ.வினயாகமூர்த்தி, மற்றும் தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் எமது பிரதேச மாணவ, மாணவிகள் ஏனைய பிரதேசங்களுக்கு சென்று கல்வி கற்பதன் மூலம் எழுகின்ற பிரச்சனை தடுக்கும் முகமாக பாடசாலையில் பிரத்தியோக வகுப்புகளை மேற்கொள்வது தொடர்பான இறுதி தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது.













Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!