தம்பிலுவில் மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை) இன் 2016 இவ்வருடம் க.பொ.த சாதாரண மாணவர்களின் O/L தின விழாவும், கலசம் நூல் வெளியீடும் 2016.11.30 புதன் அன்று தேசிய பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் திரு.வ.ஜெயந்தன் தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் விசேட அதிதியாக பாடசாலையின் பழைய மாணவியும் சட்டத்தரணியும் ஆன செல்வி.த. சுபாராஜினி, சிறப்பு அதிதியாக முன்னாள் அதிபரும் பொத்துவில் கோட்டைக் கல்விப்பணிப்பாளருமான திரு.எஸ்.இரவீந்திரன் அவர்களும் , கல்லூரியின் பிரதி அதிபரான திரு.எஸ்.தயாரூபன் மற்றும் உப அதிபரான திரு.எஸ்.பி.நாதன் மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ,, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் விசேட அதிதியான பழைய மாணவியும் சட்டத்தரணியும் ஆன செல்வி.த. சுபாராஜினி மற்றும் முன்னாள் அதிபரான திரு.எஸ்.இரவீந்திரன் மற்றும் கல்லூரியின் அதிபர், ஆசிரிய , ஆசிரியைகளுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் , கடந்த வருடம் 2015ல் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A சித்தி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மகுடம் சூட்டி கௌரவிக்கப்பட்டனர் . மேலும் கலசநூல் வெளியீடும், மாணவ,, மாணவிகளின் கலை நிகழ்வுகளும் மற்றும் இடம்பெற்றது.
















































Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!