
தம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2016ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வானது குருதேவர் பாலர் பாடசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு.பா.சந்திரேஸ்வரன் அவர்களின் தலைமையில் திகோ/தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் ஒன்றுகூடல் மண்டபத்தில் 2016.12.24 நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இன் நிகழ்வானது திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நீ.அங்குசநாத குருக்கள் ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பிக்கபட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் கௌரவ அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு.சி.ஜெகராஜன், திருக்கோவில் கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு.வா.குணாளன், திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு.சீ.ஜெயருபன் அவர்களும் கலந்து கொண்டனர்.
அத்துடன் சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் எம்.மோகனகாந்தன், திருக்கோவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செ.தர்மபாலன், பொத்துவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.சோ.இரவீந்திரன், தம்பிலுவில் திகோ/தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் திரு.வ.ஜயந்தன், திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் திரு.எம் .அருள்னாயகமூர்த்தி, கிழக்கு மாகாண முன்பள்ளி பணியக வெளிக்கள உத்தியோகத்தர் திரு.பி.மோகனதாஸ், தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராசரெத்தினம், விசேட அதிதிகளாக திருக்கோவில் சுகாதார வைத்திய பணியகத்தின் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் திரு.க.லோகிதகுமார், திருக்கோவில் பிரதேச பெண் சட்டத்தரணி செல்வி த.சுபாராஜினி ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
மேலும் இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் பாடசாலை நிர்வாகத்தினர் சார்பாக பொன்னாடை போர்த்தியும், நினைவுக் கேடயம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டதுடன், அடுத்த வருடம் தரம் ஒன்றிற்கு செல்லவிருக்கும் மாணவ மாணவிகளுக்கு விருதுகளும் சான்றிதழ் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் இவ் விடுகை விழாவில் குருதேவர் பாலர் பாடசாலையின் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்வுக்கும் இடம் பெற்றது. மேலும் இன் நிகழ்வில் பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள், பாலர் பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்






































































Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!