Contact Form

Name

Email *

Message *

பொத்துவில் தமிழ் பாடசாலைகளை எக்காரணம் கொண்டும் திருக்கோவில் கல்விவலயத்திலிருந்து பிரித்தெடுக்கமுடியாது

பொத்துவில் தமிழ் பாடசாலைகள் எக்காரணம் கொண்டும் திருக்கோவில் கல்விவலயத்திலிருந்து பிரித்தெடுக்கமுடியாது அப்பாடசாலைகள் திருக்கோவில் கல்விவலயத்துடனே இணைந்திருக்கும் என தமிழ் தே…

Image
பொத்துவில் தமிழ் பாடசாலைகள் எக்காரணம் கொண்டும் திருக்கோவில் கல்விவலயத்திலிருந்து பிரித்தெடுக்கமுடியாது அப்பாடசாலைகள் திருக்கோவில் கல்விவலயத்துடனே இணைந்திருக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் பாராளுமன்றத்தில்  தெரிவித்துள்ளார்.

 தனது பாராளுமன்ற உரையில் அவர் தெரிவித்ததாவது, பொத்துவிலிலே உருவாக்க பட இருக்கின்ற கல்வி வலயமானது தமிழரின் பிரதேசத்திலுள்ள திருக்கோவில் கல்வி வலயத்திலுள்ள எட்டு பாடசாலைகளை உள்ளடங்குவதன் மூலம் எமது தமிழர்களின் கலாசாரத்தை உண்டுபண்ணுகின்ற  பாடசாலை ஏனைய கலாசாரத்தை பின்பற்றி அங்கும் கலாசார அழிவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது
பொத்துவிலிலே ஒரு கல்வி வலயம் உருவாக்கப்பட வேண்டுமென்றால் அது சந்தோசம் அதற்காக  தமிழ் பாடசாலைகளை உள்ளடக்குவது மிகவும் பாரதூரமான ஒன்றாகவே நான் கருதுகின்றேன் அது மட்டுமல்ல அந்த பாடசாலை சமூகமும் , ஆசிரியர்களும் , மாணவர்களும், தமிழ் மக்களும் தமிழ் பாடசாலைகளை பொத்துவில் கல்வி வலயத்தோடு இணைப்பதை விரும்பவில்லை .

அப்படி இணைக்கின்றபோது  பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டு பாரிய இணைப்பிரசனையை தோற்றுவிக்க கூடிய ஒரு சந்தர்ப்பம் காணப்படுகின்றது. ஆகவே இப்படிபட்ட நிலையிலே நாங்கள் தமிழர்களுக்கான கலைகளையும் கலாசாரங்களையும் பண்பாடுகளையும் பாதுகாக்க படவென்றுமென்றால் ஒரு சமூக வலையமைப்பை ஏற்படுத்த வேண்டும்

You may like these posts

Comments