Contact Form

Name

Email *

Message *

VAT வரி அதிகரிப்பு இன்று முதல் அமுல்

15 வீத VAT வரி அதிகரிப்பு இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இதுவரை வரி அறவிடப்படாத சில பொருட்களுக்கும் இம்முறை VAT வரி அறவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மின்சார தொல…

Image
15 வீத VAT வரி அதிகரிப்பு இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதுவரை வரி அறவிடப்படாத சில பொருட்களுக்கும் இம்முறை VAT வரி அறவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மின்சார தொலைத்தொடர்புகள் சேவை, கையடக்க மற்றும் நிலையான தொலைபேசிகளுக்கான உபகரணங்கள், சுகாதார சேவை ஆகியன இந்த VAT வரித் திருத்தத்திற்குள் உள்ளடங்குகின்றன.
இதுவரையில் தேசிய கட்டட நிர்மான வரிக்குள் அடங்காத பொருட்கள் மற்றும் சில சேவைகளுக்கும் இம்முறை 2 வீத தேசிய கட்டட நிர்மான வரி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய VAT வரித் திருத்தங்களுடாக நாளாந்த வாழ்கையில் எதிர்நோக்க கூடிய சவால்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 21 அதிகமான அத்தியாவசியப் பொருட்களுக்கு , புதிய VAT வரித் திருத்தத்தினால் எவ்வித பாதிப்புக்களும் இல்லை என இராஜாங்க நிதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இன்று முதல் அமுல் படுத்தப்படும் VAT வரி அதிகரிப்பினூடாக பேக்கரி உற்பத்திகள் 05 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

You may like these posts

Comments