Contact Form

Name

Email *

Message *

அனுமதியற்ற துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கான பொதுமன்னிப்பு

அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான பொது மன்னிப்புக் காலம் மீண்டும் இன்று முதல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் எதிர்வரும் ஜூன் மாதம…

Image
அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான பொது மன்னிப்புக் காலம் மீண்டும் இன்று முதல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி வரை மீண்டும் பொதுமன்னிப்புக் காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையம் தெரிவித்துள்ளது.
பொது மக்களிடமிருந்து கிடைத்துள்ள கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமன்னிப்புக் காலப் பகுதிக்குள், அனுமதியற்ற துப்பாக்கிகளை அருகிலுள்ள பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம் அல்லது மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க முடியும் என்றும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்பர் 25 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 5 ஆம் திகதி வரை வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தில் 423 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
அதிகளவிலான துப்பாக்கிகள் கம்பஹா மாவட்டத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

You may like these posts

Comments