Contact Form

Name

Email *

Message *

வாடிக்கையாளர்களின் வியர்வைக்கு பணம் கொடுக்கும் புதிய மொபைல் அப்ளிகேசன் அறிமுகம்

வாடிக்கையாளர்களின் வியர்வைக்கு ரிவார்ட் பாயிண்டுகள் மூலம் பணம் கொடுக்கும் வகையில் புதிய மொபைல் அப்ளிகேசன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்வெட் காயின் (Sweat coin)  …

Image
வாடிக்கையாளர்களின் வியர்வைக்கு ரிவார்ட் பாயிண்டுகள் மூலம் பணம் கொடுக்கும் வகையில் புதிய மொபைல் அப்ளிகேசன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்வெட் காயின் (Sweat coin)  என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஃபிட்னெஸ் அப்ளிகேசன், மக்களிடயே உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சோதனை முயற்சியாக பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்வெட் காயின் அப்ளிகேசன், நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஆயிரம் காலடிக்கும் ஒரு பவுண்ட் பணத்தை உங்கள் கணக்கில் சேர்த்துவிடுமாம்.
அதனை நீங்கள் வாங்கும் உடற்பயிற்சி தொடர்பான சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கப் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது அப்பிள் ஐஸ்டோரில் மட்டுமே கிடைக்கும் இந்த இலவச அப்ளிகேசன், உலகம் முழுவதுமுள்ள அன்ட்ரொய்ட் பயனாளர்களுக்கு விரைவில் கிடைக்கும் என்று நம்பலாம்.

You may like these posts

Comments