Contact Form

Name

Email *

Message *

இன்ஸ்டகிரமுக்குள் ஊடுருவிய 10 வயது சிறுவன்

புகழ்பெற்ற “இன்ஸ்டகிரம்” சமூக வலைதளத்தில் ஊடுருவிய 10 வயது சிறுவனுக்கு, அந்த வலைதள உரிமையாளரான “பேஸ்புக்’ நிறுவனம் 10,000 டொலர்களை வெகுமதியாக அளித்துள்ளது. தங்களது வலைத…

Image
புகழ்பெற்ற “இன்ஸ்டகிரம்” சமூக வலைதளத்தில் ஊடுருவிய 10 வயது சிறுவனுக்கு, அந்த வலைதள உரிமையாளரான “பேஸ்புக்’ நிறுவனம் 10,000 டொலர்களை வெகுமதியாக அளித்துள்ளது.
தங்களது வலைதளங்களில் ஊடுருவுவதன் மூலமாக, அதன் கட்டமைப்புகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துபவர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் வெகுமதி அளித்து வருகிறது.
இந்த நிலையில், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜொனி என்ற 10 வயது சிறுவன், பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டகிரம் சமூக வலைதளத்துக்குள் வெற்றிகரமாக ஊடுருவி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இன்ஸ்டகிரம் சமூக வலைதளத்தை 13 வயதுக்குட்பட்டவர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. எனினும், அந்த வலைத்தளத்தில் இணையாமலேயே அதற்குள் ஊடுருவி, அதில் பயன்பாட்டாளர்கள் செய்துள்ள பதிவுகளை அழிக்கக் கூடிய விடயத்தை ஜொனி உருவாக்கியதால் அவனுக்கு பணத்தொகை பரிசளிக்கப்பட்டுள்ளது.
அந்தச் சிறுவன் கண்டுபிடித்த குறைபாடு பேஸ்புக்கினால் சரி செய்யப்பட்டுள்ளது

You may like these posts

Comments