Contact Form

Name

Email *

Message *

கூகுளின் பலருக்கும் தெரியாத சூப்பரான அம்சங்கள்...

இணையம் என்றதுமே நமது அனைவரின் நினைவுக்கு வருவது என்றால் அது கூகுள் மட்டும் தான். இன்றளவும் மில்லியன் கணக்கான பயனாளர்களை கொண்டு வெற்றிகரமாக முன்னணியில் உள்ளது. இப்படிப…

Image
இணையம் என்றதுமே நமது அனைவரின் நினைவுக்கு வருவது என்றால் அது கூகுள் மட்டும் தான்.
இன்றளவும் மில்லியன் கணக்கான பயனாளர்களை கொண்டு வெற்றிகரமாக முன்னணியில் உள்ளது.
இப்படிபட்ட கூகுளை பற்றி பலருக்கும் தெரியாத அம்சங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
* கூகுள் தேடலில் Flip A Coin என்று டைப் செய்தால் பூவா தலையா போட முடியும்.

* Roll A Dice என டைப் செய்தால் தாயம் விளையாடலாம், ஒவ்வொரு முறையும் கிளிக் செய்யும் போது வெவ்வேறு எண்களை காணலாம்.


* Askew என டைப் செய்தால் தேடல் விபரங்கள் ஒருபுறம் சரிந்திருப்பதை காணலாம். இதேபோன்று Do a barrel roll என டைப் செய்தாலும் கூகுள் தேடல் ஒரு பக்கமாக சாய்வதை காணலாம்.




* Zerg Rush என டைப் செய்தால் பதில் தானாக இடிந்து விழுவதை காணலாம்.

* கூகுளில் ‘Google Gravity’ என டைப் I’m Feeling Lucky பட்டனை க்ளிக் செய்தால் கூகுள் இடிந்து கீழே விழுவதை திரையில் பார்க்க முடியும். இதேபோல் கூகுளில் ‘Google Orbit’ என டைப் செய்து I’m Feeling Lucky பட்டனை க்ளிக் செய்தால் தேடல் முழுவதும் சுற்ற ஆரம்பிக்கும்.

* கூகுளில் ‘Google Pacman’ என டைப் செய்து பேக்மேன் விளையாட்டை விளையாடலாம்.





You may like these posts