திருக்கோவில் பிரதேச செயலப் பிரிவிலுள்ள விநாயகபுரம் பாலக்குடா பிரதேசத்தில் பக்கத்து வீட்டு 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்திய 31 வயதடைய குடும்பஸ்தர் ஒருவரை வியாழக்கிழமை(03) மாலை கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து வியாழக்கிழமை(03) திகதி மாலை 3.00 மணியளவில் குறித்த நபர் சிறுமியுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது சிறுமியின் தாயார் சந்தேகம் கொண்டு சிறுமியுடன் என்ன எனவினாவியபோது சிறுமி தனக்கு நடந்த விடயதத்தை தெரிவித்ததையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தனர் ,இதனையடுத்து குறித்த நபரை கைதுசெய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பாக திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.;