இலங்கையில் வறுமையை இல்லாதொழிப்பதற்கு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் எமது சமூகத்தில் வறுமை குறைந்ததாக தெரியவில்லை என திருக்கோவில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தெரிவித்தார். திருக்கோவில் பிரதேசத்தில் திவிநெகும திட்டத்தின் கீழ் பிரதேச திவிநெகும அதிகாரி வி.அரசரெத்தினம் தலைமையில் திங்கட்கிழமை 30.11.2015 நடைபெற்ற 77 திவிநெகும பயனாளிகளுக்கான 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவி பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கை மக்களின் வாழ்வாதார நிலைமைகளை மேம்படுத்தும் வகையில் ஆரம்ப காலத்தில் உணவு முத்திரை தொடக்கம் இன்று சமூர்த்தி திட்டம் அதனைத் தொடர்ந்து திவிநெகும திட்டம் என பல திட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டு அதனுடாக கோடிக்கணக்கான நிதிகள் செலவு செய்யப்பட்ட போதிலும், சமூத்தில் வறுமை குறைந்ததாக தெரியவில்லை.இதற்கு மக்களின் சிந்தனையும் ஒரு காரணமாக காணப்படுகின்றது. வறுமையை முற்றாக ஒழிக்க வேண்டுமென்றால் அந்தந்த பிரதேசங்களில் காணப்படும் வளங்களை அடையாளப்படுத்தி அவற்றை விருத்தி செய்து மக்களை ஈடுபடுத்தி முயற்சியாளர்களாக மாற்ற வேண்டும் என்றார். மேலும், தொடர்ந்து இலவச வாழ்வாதார உதவிகள் என வழங்கிக் கொண்டு இருப்பதனால் மக்கள் முயற்சியத்து சிந்தனை ரீதியாகவும் தாழ்வடைந்து காலப்போக்கில் இப்போது காணப்படுவதைவிட வறுமைக் குடும்பங்கள் அதிகரிக்க கூடும்.
எனவே, தனிநபர் வாழ்வாதார உதவிகளை விடுத்து குழு ரீதியாக மக்களை திரட்டி தொழில் முயற்சிகளை ஏற்படுத்திக் கொடுத்து சிந்தனை மாற்றத்துடன் சிறந்த முயற்சியாளர்களாக மாற்றுவதன் மூலமாகவே மக்களின் வறுமையை ஒரளவேனும் ஒழிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.