கல்வியின் மூலமே எதிர்காலத்தில் ஆளுமை மிக்கதொரு சமூகத்தை உருவாக்க முடியும் என திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார்.எழுத்தறிவு மேம்பாட்டுச் செயற்றிட்ட பரிசளிப்பு விழா ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி கே.முரளிதரன் தலைமையில் நேற்று புதன்கிழமை திருக்கோவில் குமர வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஆளுமை மிக்கதொரு சமூகத்தை உருவாக்குவது ஆசிரியர்களது கடமையாகும்' என்றார்.
பொறிமுறை எழுத்து, வாசிப்பு, சொல்வதெழுதுதல் போன்றவற்றில் சிறப்பு சித்தி பெற்ற திருக்கோவில் வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 02ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 80 மாணவர்கள் இதன்போது சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் திருமதி. என்.திருநாவுக்கரசு, பாடசாலை அதிபர்கள், திருக்கோவில் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இதன்போது அகில இலங்கை மட்டத்தில் இசையும், அசைவும் போட்டியில் 2ஆம் இடம்பெற்ற கலைமகள் வித்தியாலயத்திய மாணவி அ.கேசவியும் கௌரவிக்கப்பட்டார்