அம்பாறை. திருக்கோவில் பிரதேசத்தில் சமூக சேவைகள் அமைச்சு மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக விசேட தேவையுடையோர்களுக்கான அறுபதாயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு சக்கர கதிரைகள் 03.11.2015 செவ்வாய்க்கிழமை பயனாளிகளின் உறவினர்களிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இச் சக்கர கதிரைகளை திருக்கோவில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன்,உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் மற்றும் சமூக சேவைப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பாஸ்கரன் ஆகியேர் வழங்கி வைத்துள்ளனர். இதேவேளை, இன்று திருக்கோவில் பிரதேசத்தில் நுறு வயதை பூர்த்தி செய்த தம்பிலுவில் 2ம் பிரிவிவைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக பத்தாயிரம் ரூபாய் காசோலையும் உதவிப் பணமாக வழங்கப்பட்டது. இதனை பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன், உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் மற்றும் கிராம சேவகர் எஸ்.பார்த்தீபன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
விசேட தேவையுடையோர்களுக்கு சக்கரகதிரைகள் கையளிப்பு
அம்பாறை. திருக்கோவில் பிரதேசத்தில் சமூக சேவைகள் அமைச்சு மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக விசேட தேவையுடையோர்களுக்கான அறுபதாயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு சக்கர கதிரைக…