Contact Form

Name

Email *

Message *

வளிமண்டல குழப்பம்: வடக்கு கிழக்கில் மழை

வளிமண்டல குழப்ப நிலை காரணமாக வட கிழக்கு பிரதேசத்தில் மழைக்கான காலநிலை காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதனால் வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவ…

Image
வளிமண்டல குழப்ப நிலை காரணமாக வட கிழக்கு பிரதேசத்தில் மழைக்கான காலநிலை காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதோடு, வானம் முகில்களால் நிறைந்து காணப்படும்.

சில பிரதேசங்களில், சுமார் 100 மில்லிமீற்றர் வரையான மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், இதன்போது காற்றின் வேகம் மணிக்கு 20 - 40 கிலோமீற்றர்களாக காணப்படும் எனவும், இதன் போது கடல் தற்காலிகமாக கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may like these posts