தேசிய பாடசாலைகளில் சுமார் ஆயிரம் விஞ்ஞான மற்றும் கணித பாட ஆசிரியர்களுக்கு வெற்றிடம் நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வெற்றிடங்களை நிரம்பும் வகையில் விரைவில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் உப்பாலி மாரசிங்க கூறியுள்ளார்.
இதனைத் தவிர மேலும் சில பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கும் நியமனங்கள்
வழங்கப்படவுள்ளன.
பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானியை விரைவில் வௌியிடவும் கல்வி அமைச்சு உத்தேசித்துள்ளது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!