ஒரு சமூகம் நீண்டு நிலைத்திருக்க கல்வி அவசியம்
இலங்கையில் தற்போது இலவச கல்வி, கட்டாயக்கல்வி, அனைவருக்கும் கல்வி என்ற வகையில்பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை கல்வியை இலவசமாக பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் கல்விக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஒரு நாட்டின் எழுத்தறிவு வீதம் உயர் மட்டத்தில் காணப்படுமாயின் அங்கு சமூக, பொருளாதார, கலாசார அபிவிருத்திகளும் உயர்மட்டத்திலேயே காணப்படும். எனவே ஒரு சமூகம் நீண்டு நிலைத்திருக்க எழுத்தறிவு இன்றியமையாதது என திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர். சுகிர்தராஜன் தெரிவித்தார்.
திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் முறைசாராக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு. கே. பிரபாகரன் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட 'எழுத்தறிவும் நீண்டு நிலைக்கக்கூடிய சமூகமும்' எனும் தொனிப்பொருளின் கீழ் சர்வதேச எழுத்தறிவு தினம் - 2015ற்கான இறுதி நாள் நிகழ்வு ஒர் விழிப்புணர்வு ஊர்வலமாக திகோஃ தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலத்தில் வரை திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர். சுகிர்தராஜன் தலைமையில் 2015.09.08ம் திகதி நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வானது காலை 8.00 மணிக்கு மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் சகிதம் ஒர் விழிப்புணர்வு ஊர்வலமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவ் ஊர்வலத்தின் போது மாணவர்களது கல்வியைத் தடுக்கும் காரணிகளை எதிர்த்து வாசகங்களை தாங்கிய பதாதைகளுடன் ஊர்வலமாக வந்ததுடன் பெற்றோர் மத்தியில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.
ஊர்வலம் பாடசாலையை அடைந்ததும் பெற்றோர்கள், மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் அதிபர் எஸ். சிறிதரன் தலைமையில் நடைபெற்றதுடன் எழுத்தறிவும் கல்வியின் முக்கித்துவமும் பற்றி வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர். சுகிர்தராஜன்,பிரதிக்கல்விப் பணிப்பாளர் வா. குணாளன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் வி. ஜயந்தன் ஆகியோர் உரையாற்றியதுடன் மாணவர்களது கலை நிகழ்ச்சியும் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் வா. குணாளன்,கோட்டக்கல்விப் பணிப்பாளர் வி. ஜயந்தன், உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ். வினாயகமூர்த்தி, ஆசிரிய ஆலோசகர் திருமதி. கு. வரதன், திரு. வீ. கிருபாகரன்,ருniஉநக இணைப்பாளர் சு. விவேகானந்தராஜா மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!