Contact Form

Name

Email *

Message *

ஆப்பிளின் பிரமாண்டம்: புதிய ஐபேட், டிவி, ஐபோன் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வகை ஐபேடுகளை வெளியிட்டு்ள்ளது. ஐபேட் புரோ என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு  ஐபேட் புரோ 22 மடங்கு வேகமானது. இதனை ஆப…

Image
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வகை ஐபேடுகளை வெளியிட்டு்ள்ளது. ஐபேட் புரோ என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு 

ஐபேட் புரோ 22 மடங்கு வேகமானது. இதனை ஆப்பிள் பென்சில், விரல்கள் மூலம் பயன்படுத்தலாம். 12.9 இஞ்ச் அகலம் கொண்ட இதில் 4 ஸ்பீக்கர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

.தொடர்ச்சியாக 10 மணி நேரம் பயன்படுத்தும் பேட்டரி திறன் கொண்டது இது சிறியவகை கம்ப்யூட்டர்களான லேப்டாப் உள்ளிட்டவைகளை விட 80 சதவீதம் வேகமானது.
ஸ்மார்ட் வகை கீபோர்ட்' வசதிஉள்ளது.  இந்த ஐபேட் புரோவுக்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் கை கோர்த்துள்ளது.

 ஐபேட் புரோவில், அலுவலக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் எம்.எஸ்., ஆபிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் மாதம் முதல் இந்த ஐபேட்கள் விற்பனைக்கு வருகிறது.



புதிய ஐபேட் மினி-2 மாடல் 269 அமெரிக்க டாலர், ஐபேட் மினி-4 மாடல்- 399 அமெரிக்க டாலர், ஐபேட் ஏர் 2 மாடல் -499 அமெரிக்க டாலர், ஐபேட் புரோ மாடல் 799 அமெரிக்க டாலர் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபரில் புதிய வகை ஆப்பிள் கடிகாரம்:

ஆப்பிள் நிறுவனத்தின் மற்றொரு அறிமுகமாக புதிய வகை கடிகாரங்கள் அக்டோபர் மாதம் முதல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரங்களுக்காக 10 ஆயிரம் செயலிகள் பிரத்யேகமாக 
வடிவமைக்கப்பட்டுள்ளன. தவிர, மொபைல் போன்களில் மட்டும் செயல்ப்படுத்தப்பட்டு வந்த பேஸ்புக் மெசஞ்சர் செயலி தற்போது ஆப்பிள் கடிகாரத்திலும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘

டிவியில் செயலிகள்:

ஆப்பிள் நிறுவனம் புதிய வகை டிவியை வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பம்சமாக செயலிகளை டிவிக்கள் மூலம் பயன்படுத்தலாம். இதன் மூலம் டிவி, கேம், ஷாப்பிங் போன்று மொபைல் செயலிகளை டிவியில் பயன்படுத்தலாம். புது வடிவில் டிவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 
பிரத்யோகமாக செட் டாப் பாக்ஸ், டச் பேட் வசதி கொண்ட ரிமோட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ஸ்ரியின் துணை கொண்டு குரல் மூலம் டிவியை கட்டுப்படுத்தலாம். செட் ஆப் பாக்சில், 64 பிட் ஏ8 சிப், புளூடூத், ஓய்பை, ஆகியவை உள்ளன. ரிமோட்டில் புளுடூத் வசதி, வால்யயூம் கன்ட்ரோல் உள்ளன.மொபைல் போல இந்த ரிமோட்டை சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது.

ஐபோன் 6 எஸ் :

புது வகை ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஐபோன் 6 எஸ், ஐபோன் 6 எஸ் பிளஸ் என இவற்றிற்கு பெயரிடப்பட்டுள்ளது.* ரோஸ் கோல்டு நிறத்தில் புதிதாக இந்த ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது 3டி டச் தொடு திரை வசதி கொண்டது. ஐ.ஓ.எஸ். 9 வசதி இதில் உள்ளது.

You may like these posts

Comments