திருக்கோவில் கோட்டத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் 9 பாடங்களிலும் 9ஏ சித்தியைப்பெற்ற திருக்கோவில் மெ.மி.த.க.பாடசாலையைச்சேர்ந்த மாணவன் இரத்தினகுமார் பவிநிரன், க.பொ.த. உயர்தரத்தில் கலைப்பிரிவில் 3ஏ சித்திபெற்று அம்பாறை மாவட்டத்தில் கலைப்பிரிவில் முதலிடத்தைச்சுவீகரித்த அதே பாடசாலை மாணவி பிரகலாதன் மதுநிதா ஆகியோருக்கு தலா 10ஆயிரம்ருபா வழங்கப்பட்டு கௌரவிக்க பட்டனர் .
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய நிருவாகத்தினரின் வேண்டுகோளையேற்று மக்கள்வங்கி முகாமையாளர் எ.நிசாம் உதவிமுகாமையாளர் எஸ்.கஜன் ஆகியோர் இவ் ஏற்பாட்டைச் செய்திருந்தனர். ஆலய இறுதிநாள் திருவிழாவன்று இரவு பாராட்டுவிழா ஆலயத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக் குருக்கள் கோட்டக்கல்விப்பணிப்பாளரும் வண்ணக்கருமான வ.ஜெயந்தன் திருக்கோவில் உதவிபிரதேசசெயலாளர் எஸ்.ஜெகருபன் பொலிஸ் பொறுப்பதிகாரி பி.தென்னக்கோன் உள்ளிட்டோர் பரிசுகளையும் வழங்கிவைத்தனர்.
நினைவுச்சின்னமும் 05ஆயிரம் ருபாவும் ஆலயத்தால் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!