கல்முனையில் தனியார் பஸ் தரிப்புநிலையத்தின் அருகாமையில் உள்ள வீதிக்குநள்ளிரவில் (காரியப்பர் வீதி) எனபெயர்மாற்றபட்ட உடனே அம்பாறை மாவட்டகல்முனை தொகுதிக்குரிய தலமைவேட்பாளர் ஹென்றி மகேந்திரன்அவ்விடத்துக்கு சென்று உரிய பெயர்பலகையை உடைத்தெறிந்த நடவடிக்கைக்குஎதிராக அவருக்கு எதிராக குறித்த பெயர்பலகையை சேதப்படுத்தியமை சம்பந்தமாககுற்றம் சாட்டப்பட்டு, பொலிஸார் தேடுதல்நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
2015-08-24 அன்று சிரேஸ்டசட்டத்தரணி,சொலிஸிட்டர் பரிஸ்டரும்மற்றும் அம்பாறை மாவட்ட திகாமடுல்லதேர்தல் தொகுதிக்குரிய 10ம் இலக்கத்தில்போட்டியிட்ட வேட்பாளருமான சிந்தாத்துரைஜெகநாதன் அவர்கள் வேட்பாளர் ஹென்றிமகேந்திரனை பொலிஸில் ஆஜர்படுத்தினார்.பின்னர் கல்முனை நீதவான் நீதிமன்றில்சட்டத்தரணி மனார்டினின் அனுசரனையுடன்தோன்றி அவரை பிணையில் விடும்படிகோரினார்.
பின்னர் தலா 75000 பெறுமதியான இருவர்சரீரப்பிணையில் கல்முனை நீதவானால்பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இச்சம்பவத்தின் போது Telo இயக்கசெயல்பாட்டு பாராளுமன்ற உறுப்பினரானசெல்வம் அடைக்கலநாதன் அவர்களும்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்தற்போதய கிழக்கு மாகாணசபைஉறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) வும் சமூகமனித்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்ந்து சிரேஸ்ட சட்டத்தரணிஆதரவாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போது இப்பெயர்பலகை சட்ட விதிகளுக்குபுறம்பாகவும், சட்டத்தின் தேவைப்பாடுகளைதிருப்தி செய்யாத வகையிலும்அமைக்கப்பட்ட நடவடிக்கையாகும் . இங்குசாட்டப்பட்ட குற்றச்சாட்டில் ஒன்றானசட்டமுறையற்று கூட்டம் கூடிஉடைத்ததென்பதை சட்டமுரணற்றது என கூறப்;பட முடியாது . ஏனெனில் பெயர்பலகைஅமைக்கப்பட்ட செயலே சட்டமுரணானதுஎனவும் கூறினார்.எது எவ்வாறு இருப்பினும்இவ்வழக்கின் இறுதித் தீர்மானத்தினைநியாயமான நீதிமன்றமே எடுத்தல் வேண்டும்.
மேலும் பொலீஸாரினால் மன்றில்அணைக்கப்பட்ட “B” அறிக்கையில்இப்பெயர்பலகை அமைப்பதற்குபயன்படுத்தப்பட்ட பணமானது பொதுசொத்தா .அரச சொத்தா அல்லது பொதுசொத்துக்கு புறம்பானதா என்பதுதொடர்பான தெளிவான அறிக்கையும்சமர்ப்பிக்கப்படவில்லை என்பதும்குறிப்பிடத்தக்கது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!