Contact Form

Name

Email *

Message *

ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எம் மக்களின் விடியலின் தேடல் ஆரம்பித்துவிட்டது - வேட்பாளர் சிந்தாத்துரை ஜெகநாதன்(சட்டத்தரணி).

ஒலுவிலுக்கு வடக்கே அமைந்துள்ள 360 குடும்பங்கள் வாழ்கின்ற ஒரு சிறிய கிராமமே திராய்க்கேனி. இங்குள்ள மக்கள் பல்திறப்பட்ட காடையர்களின் அச்சுறுத்தல்களினாலும், அதிரடிப்படையினரின் ய…

Image

ஒலுவிலுக்கு வடக்கே அமைந்துள்ள 360 குடும்பங்கள் வாழ்கின்ற ஒரு சிறிய கிராமமே திராய்க்கேனி. இங்குள்ள மக்கள் பல்திறப்பட்ட காடையர்களின் அச்சுறுத்தல்களினாலும், அதிரடிப்படையினரின் யுத்த நெருக்குதல்களினாலும் துன்பப்பட்டு உயிர் ,உடமைகளை இழந்து உணர்வுகள் உருக்குலைந்து சொல்லொனா துயரங்களை அனுபவித்தார்கள். தற்போதய சந்ததியினரின் மூதாதையர்கள் சுமார் நாப்பது வருடங்களாக வாழ்ந்த பூமி அது.
ஆனால் அண்மைக்கால துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை தனது கையகப்படுத்தல் நடவடிக்கையினால் எம் மக்களது பல காணிகள் அரசுடமையாக்கப்பட்டு, துன்பப்பட்டு , இருக்க இடமின்றி இன்றும் சிலர் வாழ்ந்து வருகின்றனர்.
பிழையான ஆதன அட்டவணை, நில அளவைப்படமோ, வலிதான ஆவணங்களோ அற்று பல்திறப்பட்ட சட்டசிக்கல் இருந்தும் துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை அபிவிருத்தி நோக்கம் கருதி நீண்ட கால ஆட்சியுரித்து, உடமையிருந்தும் மனிதாபிமானமற்ற வகையில், கருணையின்றி தமக்கு மேற்குறித்த காணியைத்தவிர வேறு உடமையோ, இல்லாத நிலையில் வாழும் எம் மக்களில் சிலருக்கு இன்னும் மாற்றுக் காணியோ அல்லது வதிவதற்கான சிறு பகுதியோ கொடுக்காது நடக்கும் இந்நிலைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவிருப்பதாக சட்டத்தரணி ஜெகநாதன் அம்மக்களை நேரில் சந்தித்த போது குறிப்பிட்டார்.
இது சம்பந்தமாக பாலமுனை-06 , பாடசாலை வீதியைச் சேர்ந்த பண்டா செல்வராணி என்னும் ஒரு பெண்மணியை நேரில் சந்தித்த போது அழுது தன்னுடைய குறையையும் ,அரசின் அநீதியான செயற்பாட்டையும், சட்டநடவடிக்கையின் பட்சபாதத்தையும் , சுட்டிக்காட்டிர். தனக்கு வதிவதற்கு வேறு உடமையோ ,மாற்றுக் காணியோ இல்லாத நிலையில் அக்காணியின் ஒரு சிறு துண்டையாவது பெற்றுத்தருமாறு கோரிய போதும் தனக்கு ஒரு சிறு துண்டையேனும் வழங்காது வெளியேற மேல் நீதிமன்றம் கட்டளையாக்கியதாகவும் குறிப்பிட்டார். அப்போது சட்டத்தரணியும் தற்போது தமிழின விடுதலைக்காக குரல் கொடுக்கும் வேட்பாளர் சி.ஜெகநாதன் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றிலே இவ்வழக்கை மேன்முறையீடு செய்து குறித்த பாதிக்கப்பட்ட அப் பெண்மணிக்கு தகுந்த நியாயம் இயல்தகு விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். பொது மக்களின் நன்மை கருதிதான் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப் போவதாகவும் மேலும் உறுதியளித்தார்.






You may like these posts

Comments