Contact Form

Name

Email *

Message *

உரிமையினைப் பெறவே கூட்டமைப்புக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர் கிழக்குமாகாணசபை உறுப்பினர் த.கலையரசன்)

அம்பாரைமாவட்டத் தமிழ்மக்கள் மாற்றுக்கட்சிக்குச் சோரம்போகாது தமிழர்களின் உரிமைப்பயணத்திற்காக தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்ற…

Image
அம்பாரைமாவட்டத் தமிழ்மக்கள் மாற்றுக்கட்சிக்குச் சோரம்போகாது தமிழர்களின் உரிமைப்பயணத்திற்காக தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றியடையச்செய்துள்ளதுடன் சர்வதேசத்திற்கும் தமிழ்மக்கள் வெளிக்காட்டியுள்ளார்கள் அதற்காக அம்பாரைமாவட்ட மக்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என அம்பாரைமாவட்டத்தில் போட்டியிட்டவரும் கிழக்குமாகாணசபை உறுப்பினருமான த.கலையரசன் தெரிவித்தார்
அவரது இல்லத்தில் வைத்த ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் தொடர்ந்த தெரிவிக்கையில் அம்பாரைமாவட்டமானது எனைய மாவட்டங்களைவிட பலவழிகளிலும் நெருக்கீடு உடையமாவட்டம் இங்குதான் தமிழர்களின் காணிகள் பேரினவாதிகளால் கையகப்படுத்தப்பட்டு வருகிறது அதனைத் தட்டிக்கேட்பதற்கு கடந்தகாலங்களில் யாரும் முன் நிற்கவில்லை
தமிழ்க் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவரும் அரசாங்கத்திடம் மாறி சலுகைபெற்று இருந்தார் இந்நிலை அம்பாரையில் வரக்கூடாது என்பதற்காகவே நான் மாகாணசபையில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களுக்காக பலசேவைகளை முன்னெடுத்துவரும்போதுதான் பாரளுமன்றத்தேர்தல் வந்ததும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமை மற்றும் எமது மக்களின் ஆதரவுடன்போட்டியிடமுன்வந்தேன் இந்நிலையில்
கடந்த காலங்களில் மாற்றக்கட்சியில் இணைந்துகொண்டு தமிழ்க்கூட்டமைப்பையும் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தையும் காட்டிக்கொடுத்த பலர் என்னுடைய அரசியல் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ளமுடியாமல் எனக்கெதிரானபொய்யான துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டும் மக்கள்மத்தியில் என்மீதுள்ள நம்பிக்கையையும் வீணடித்து இருந்தனர்
தேர்தலில் தோல்வியை ஏற்படுத்தும் சதியினைச் செய்திருந்தனர் இந்நிலையில் 14723 வாக்குகளை அம்பாரை மாவட்ட மக்கள் எனக்களித்து மாவட்டத்தில் இரண்டாவது நிலையில் தெரிவாகியுள்ளேன் இதற்காக நான் என்னுடைய நன்றியை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்
; காலம்போகப்போக அம்பாரைமாவட்டமக்கள் புரிந்து கொள்வார்கள் விசமிகள் செய்தது சதிமுயற்சிதான் என்பதை புரிந்துகொள்வார்கள் சதிகாரர்கள் என்னதைச் சொன்னாலும் அம்பாரைமாவட்டமக்களுடைய விடுதலைக்காக என்னுடைய பயணம் தொடர்ந்துகொண்டேஇருக்கும் தமிழர்களுக்கு அநிதி வரும்போது அதனை என்னுடைய உயிரைக்கொடுத்தாவது தடுத்துநிறுத்துவேன் காசுக்கோ பணத்திற்கோசோரம்போகமாட்டேன் நானும் உங்களைப் போன்று ஒரு ஏழையாகத்தான் இருக்கின்றேன் காசுக்காக நான் யாருக்கும் அடிபணியமாட்டேன் எனது தமிழ்மக்களுக்குப் பிறகுதான் எதுவும் என்றார்

You may like these posts