எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் எதிர்வரும் 24ஆம் திகதி உரிய அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களினால் அனுப்பி வைக்கப்படவுள்ளது என தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்ற அனைத்து ஆசிரியர்களும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி வாக்களிக்கவுள்ளனர். ஏனைய அரச அரச உத்தியோகத்தர்கள் ஓகஸ்ட் மாதம் 5ஆம் 6ஆம் திகதிகளில் தத்தமது அலுவலகங்களில் வாக்களிக்கவுள்ளனர்.
வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 29ஆம் திகதி தபாலகங்களிடம் கையளிக்கப்படும் என்றும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வாக்காளர் அட்டைகள் தபால் உத்தியோகத்தர்களினால் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தேர்தல் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!