இலங்கைத்திருநாட்டின் தவப்பெரும்ஞானியான சிவயோகசுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்ட அமெரிக்கா ஹவாய ஆதீன கர்த்தா குருதேவர் சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் சீடரும் ஹவாய் ஆதீனத்தின் சற்குருவான போதிநாத வேலன் சுவாமிகள் தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்திற்கு கடந்த 2015.01.27 அன்று காலை 10.45மணியளவில் வருகைதந்தார். இன் நிகழ்வின் அமெரிக்கா ஹவாய ஆதீன சற்குரு சண்முகானந்தாஸ் சுவாமிகளும், இலங்கைக்கான பிரதிநிதியான தொண்டுநாதன் சுவாமிகளும், குருகுல நிர்வாகத்தினர், குருகுல மாணவர்கள், குருகுலத் தொண்டர்கள், பாடசாலை மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாலர்பாடசாலை மாண்வர்கள், பெற்றோர்கள், மற்றும் பொது மக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இன் நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக அமெரிக்கா ஹவாய ஆதீன சற்குருவான போதிநாத வேலன் சுவாமிகளின் சிறப்பான பிரசங்கம் இடம்பெற்றது, அத்துடன் சுவாமி அனைவருக்கும் அருளாசியினையும், ஆசீர்வாதமும் வழங்கினார். www.gurudeva.org












