வழமை போல் இந்த வருடமும் தம்பிலுவில் சிவதொண்டர் அமைப்பினர் கதிர்காம பாதயாத்திரை செல்பவருக்கு குடிநீர்,மருத்துவ வசதி வழங்கியிருந்தனர்தம்பிலுவில் சிவதொண்டர் அமைப்பானது உகந்தை தொடக்கம் கூமுனை வரையும்,கூமுனை தொடக்கம் யால வரையான காட்டுப்பகுதியில் சிவதொண்டர் அமைப்புத் தொண்டர்கள் தங்கியிருந்து குடிநீர்,மருத்துவ வசதி வழங்கியதுடன் இச் சேவையினை 27.06.2014 தொடக்கம் 06.07.2014 ம் திகதி வரை திறம்பட செய்துள்ளது. இதற்காக 15 தொண்டர்கள் ,03 உழவு இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
சிவதொண்டர் அமைப்பானது 1999 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சமய, சமூக கலாச்சாரப்பணிகளை செய்து வருகின்றது. இவ்வமைப்பானது 2004 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு பல்வேறு சேவைகளை செய்துவருகிறது.
உகந்தை மலை முருகன் ஆலயத்தின் உற்சவ காலத்தில் ஆலய அலங்கரிப்பு, மற்றும் சிரமதான பணிகளை செய்து வருவது வழக்கமாகும்.

