Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்

நல்லூர் கந்தசுவாமி கோவில் மன்னார் திருக்கேதீஷ்வரம் திருகோணமலை கோனேஸ்வரம் ஆகிய வரலாற்றுடன் தொடர்புடைய ஆலயம்களாக இருப்பது போல் மட்டக்களப்பு தமிழர் வரலாற்றில் முதன்மையாக கருதப…

Image

நல்லூர் கந்தசுவாமி கோவில் மன்னார் திருக்கேதீஷ்வரம் திருகோணமலை கோனேஸ்வரம் ஆகிய வரலாற்றுடன் தொடர்புடைய ஆலயம்களாக இருப்பது போல் மட்டக்களப்பு தமிழர் வரலாற்றில் முதன்மையாக கருதப்படுவது திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயமாகும். கிழக்கின் வடக்கே வெருகல் தொடக்கம் தெற்கே கூமுனை வரையுள்ள திருப்படைக்கோவில்களில் முதன்மையானதும் பண்டைய அரசர்களின் மதிப்பும் மானியமும் சீர்வரிசைகளும் பெற்றுவந்த இவ் ஆலயம் இலங்கையினை ஆட்சிசெய்த சிங்கள மன்னர்களாலும் சோழ பாண்டியராலும் கண்டி நாயக்க மன்னராலும் திருப்பணிகள் இடம் பெற்று வந்துள்ளது. இத்தனை சிறப்புக்கள் பொருந்திய திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தினை முதல் முதலில் கற்கோவிலாக நிர்மாணித்த மன்னன் இலங்கை முளுவதனையும் ஆட்சி செய்த மனு மன்னன் என்ற எல்லாளன் ஆவான் இதனை கல் வெட்டுக்கள் செப்பேடுகள் தொல்லியல் ஆய்விச்சான்றுகள் உறுதி செய்கின்றன.

இவ்வாறு மகிமை பெற்ற இவ்வாலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று 26.07.2014 சனிக்கிழமை காலை சமுத்திரத்தீர்தோற்சவம் இடம் பெற்றது. இவ் தீர்த்தோற்சவத்தின் போது உலக வாழ்விற்கு உருத்தந்த தந்தைக்கு தர்ப்பனம் செய்வதற்கு மிகச் சிறப்பான நாளான இன் நாளில் அடியார்கள் தமது இறந்த தந்தைக்கு சமுத்திர நீராடி தர்ப்பனம் பிதிர்கடங்களை சேலுத்தினர்.




You may like these posts