Contact Form

Name

Email *

Message *

கோபம் இனி வேண்டாம்..... இருகண்கள் பாரம்மா.....

தம்பிலுவில் கண்ணகை  அம்மன் கோவில், "வைகாசி பொங்கல்" பற்றியும், அன்றைய வழிபாட்டு முறைக்கும், இன்றைய வழிபாட்டு முறைக்கும் உள்ள வேறுபாடுகளையும், அந்த பத்தினித் த…

Image
தம்பிலுவில் கண்ணகை  அம்மன் கோவில், "வைகாசி பொங்கல்"
பற்றியும், அன்றைய வழிபாட்டு முறைக்கும், இன்றைய வழிபாட்டு
முறைக்கும் உள்ள வேறுபாடுகளையும், அந்த பத்தினித் தெய்வத்தின்
ஆலயத்தில் ஆச்சாரமில்லாமல் பலர் நடந்துகொள்வதுபற்றியும்,
பாரம்பரிய தமிழ் வணக்கமுறை மாறி, ஆரியர்களின் வைஷ்ணவ
முறை தலைதூக்கப்பார்க்கிறது, இதை கோவில் நிர்வாகத்தினர்
கண்டுகொள்ளவேண்டும் என்று சொல்லியும்,  தம்பிலுவில் கண்ணகை
அம்மன் ஆலயத்தின் சிறப்பையும், அதன் வரலாற்றையும் எமது
இணையத்தளத்தில் எழுதியுள்ள கட்டுரையாளர் திரு. துளஞ்சணன்
விவேகானந்தராஜா பாராட்டுக்குரியவர். அவர் தனது கட்டுரையில்
குறிப்பிட்ட விடயங்களை கோவில் நிர்வாகத்தினர் கவனத்தில்
எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும், என்னதான் வாழ்வியல் மாற்றங்கள்
வந்தாலும் தமிழ் பாரம்பரியம் நீர்த்துப்போக விடக்கூடாதென்றும்
புலத்தில் வாழும் பத்தினித்தெய்வத்தின் பக்தர்கள் வேண்டுகோள்
விடுகின்றார்கள்.
எல்லோருக்குமாக எங்களின் பாடல் ஒன்று...
-------------------------------------------------------------------------------------------------------------------
 
கோவலனின் கண்ணகியே எங்கள் குறைகள் கேளம்மா....
கோபம் இனி வேண்டாம் இரு கண்கள் பாரம்மா..
ஓராயிரம் கண்ணாள் எங்கள் கண்ணகி அம்மாள்
அன்னை ஆதி சக்தியின் அவதாரமல்லவா.....
அரகரோகரா அரகரோகரா அம்மனுக்கு அரகரோகரா...
 
மழையேதுமில்லை வெயில் அனலானதம்மா....
மாதம் மூன்று மாரி பொழிய வேண்டும்..
வளமான வயல்கள் பாலை வனமானதமா..
வசந்த வாழ்வை மனமிரங்கி தருவாய்....
நீ ஏடகமமர்ந்து தாயே ஊர்வலம் வந்தால்
ஊரில் வேற்றுமை இல்லை நாங்கள் ஒரு தாய் பிள்ளை..
 
மாசாத்துவானின் மருமகளாக வந்து...
மாதர்குல மாணிக்கமாய் வாழ்ந்தாய்
மணவாளன் மீது வீண்பழி வந்தபோது
மதுரை நகரை பார்வையாலே எரித்தாய்
நீ பத்தினி தெய்வம் பார் போற்றிடும் அம்மன்
கோவில் கப்புகனாராய் வந்து வாக்கு தா அம்மா

=========================================================================

You may like these posts