நேற்று மன்னம்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது வான் ஓன்று மோதியதால் குடும்பஸ்தர் பலியாகி உள்ளார் . மரணமடைந்தவர் தம்பிலுவிலை கலைமகள் வீதியை சேர்ந்த சங்கரப்பிள்ளை ஜெயராசா , இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இரண்டாவது விபத்து ..
திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாமரைக்குளம் பகுதியில் நேற்று மாலை டிரக் வண்டியொன்று தனது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார்.
திருக்கோவில் – விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பாலசுந்தரம் இந்திரகுமாரன் என்ற டிரக் வண்டி சாரதியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும் டிரக் வண்டியில் பயணம் செய்த மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
விபத்தில் உயிரிழந்த நபருடைய சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளதுடன், திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!