
(ASK)
தேசிய, மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சிறந்த வருடார்ந்த அறிக்கையிடல் போட்டியில் மாவட்ட ரீதியில் தம்பட்டை மகா வித்தியாலயம் முதலாம் இடம்
கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட 2018ஆம் ஆண்டுக்கான தேசிய, மாகாண மட்டப் பாடசாலைகளுக்கிடையிலான சிறந்த வருடார்ந்த அறிக்கையிடல் போட்டியில் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பட்டை மகா வித்தியாலயம் அம்பாறை மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளது.
இப் போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கான சான்றிதழ் மற்றும் ஞாபக சின்னங்களை வழங்கும் நிகழ்வு கடந்த 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு சர்வதேச பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் வைத்து கல்வி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அவர்களினால் பாடசாலை அதிபர் எம்.சிவானந்தா அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இப் போட்டிக்கான வருடார்ந்த அறிக்கைகளை தம்பட்டை மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் ஆசிரியையும், பொருளாளருமான திருமதி.எம்.எஸ்.சஞ்ஜீவ அவர்களால் சிறந்த முறையில் போட்டிக்கான வருடார்ந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!