Contact Form

Name

Email *

Message *

வெளி இடங்களிலிருந்து கல்முனைக்கு வருகை தந்திருந்த தமிழ்மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி போன்ற இடங்களில் இருந்தும் அது மட்டுமல்லாது காரைதீவு, மல்வத்தை, வீரமுனை, அண்ணமலை, நாவிதன்வெளி மக்களையையும் கல்முனைக்கு தேவைகளின் நிமித்தம் வ…

Image

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி போன்ற இடங்களில் இருந்தும் அது மட்டுமல்லாது காரைதீவு, மல்வத்தை, வீரமுனை, அண்ணமலை, நாவிதன்வெளி மக்களையையும் கல்முனைக்கு தேவைகளின் நிமித்தம் வருகை தந்த தமிழ்மக்கள் கல்முனையில் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில்  நடக்கும் ஹர்த்தால் மற்றும்  கலவரங்களினால்  எங்கு போவது எப்படி போவது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

அந்தத் தமிழர்களை கல்முனை தமிழ் இளைஞர் சேனை கல்முனை தமிழ் இளைஞர் ஒன்றியம் மற்றும் அருகில் உள்ள தமிழ் கிராமத்து இளைஞர்கள் ஒன்றிணைந்து மீட்டு பாதுகாப்பாக கல்முனையை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர். அவர்களோடு சொறிக்கல்முனை பங்குத்தந்தையினை பாதுகாப்பாக கொண்டு சேர்த்தார்கள்.
கடந்தகாலங்களில் இவர்கள் போக்குவரத்தின்றி கஸ்ட்டப்பட்டு சிலர் மாட்டியுமுள்ளனர். பலர் மறுநாள் போகின்ற நிலைமையும் இருந்தது.

ஆனால் இம்முறை அவர்களை பாதுகாப்பாக மீட்டு அவரவர் இடங்களுக்கு கொண்டு சென்றனர் இந்த தமிழ் இளைஞர்கள். வாழ்த்துக்கள்.










You may like these posts

Comments