Contact Form

Name

Email *

Message *

"ரெஸ்டோ"வினால் எம்மண்ணின் தோன்றல்களைப் பாராட்டி, கௌரவிக்கும் விழா - 2017

[NR] கல்வியினால் மேலோங்கி உயர்பதவிகளை வகித்து எமது பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த எம்மண்ணின் தோன்றல்களைப் பாராட்டி, கௌரவிக்கும் முகமாக  தம்பிலுவில் பொருளாதார, சமூக அபிவிரு…

Image

[NR]

கல்வியினால் மேலோங்கி உயர்பதவிகளை வகித்து எமது பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த எம்மண்ணின் தோன்றல்களைப் பாராட்டி, கௌரவிக்கும் முகமாக  தம்பிலுவில் பொருளாதார, சமூக அபிவிருத்தி அமைப்பினால் [ரெஸ்டோ] (TESDO - Thambiluvil Economic, Social Development Organization) நாடாத்தப்படும் கௌரவிப்பு விழா -2017 நிகழ்வானது 2017.11.05 ம் திகத, ஞாயிற்றுக்கிழமை நேற்றையதினம்  திகோ/ தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மண்டபத்தில் ரெஸ்டோ அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி பி.மோகனகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.


இந் நிகழ்வின் போது எமது பிரதேசத்தில் கல்வியினால் மேலோங்கி உயர்பதவிகளை வகித்து எமது பிரதேசத்திற்கு பெருமை சேர்த்தவர்களான கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. க.முருகானந்தம் மற்றும் கிழக்கு மாகாண நீர்பாசன திணைக்கள பணிப்பாளரும் சட்டத்தரனியும் ஆன எந்திரி. செ.திலகராஜா மற்றும் இலங்கை நிர்வாக சேவைக்கு(SLAS)  தெரிவாகி, யாழ் மாவட்ட பிரதி தேர்தல்கள் ஆணையாளர்  எந்திரி. எந்திரி.த.அகிலன் மற்றும்  இலங்கை நிர்வாக சேவைக்கு(SLAS)  தெரிவாகி அட்டாளைச்சேனை  பிரதேச செயலாளர் திரு. தீ.ஜே .அதிசயராஜ்  மற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு(SLEAS) தெரிவாகிய, திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.யோ .ஜெயச்சந்திரன் மற்றும் அண்மையில் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு(SLEAS) தெரிவாகிய    திரு.எம்.சபேஷ்க்குமார் மற்றும் இலங்கை கல்வி நிர்வாக (SLEAS) தெரிவாகிய  திரு. கே. கங்காதரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இந் நிகழ்வானது  தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின்  கப்புகனார் திரு. கந்தையா தங்கத்துரை அவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம அதிதிகாளாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும், மற்றும் சிறப்பு அதிதியாக  திருக்கோவில் பிரதேச செயலக பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகராஜன் அவர்களும், மற்றும் கௌரவ அதிதியாக  வைத்திய கலாநிதி திருமதி சுலோசனா இராஜேந்திரா அவர்களும், திருக்கோவில் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளைநாயகம் அவர்களும்,   திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம்.பி ஹேரத் அவர்களும்,  ஓய்வுநிலை வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி திலகவதி கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில்  TESDO (ரெஸ்டோ) நிர்வாகசபையினர் மற்றும் அங்கத்தவர்கள், உறுப்பினர்கள், நலன்விரும்பிகள், சமூக சேவகர்கள், பொதுமக்கள் மற்றும் பலரும் இந்நிகழ்வில்   கலந்து கொண்டனர்.

















































You may like these posts

Comments