
[NR]
தம்பிலுவில் பொருளாதார, சமூக அபிவிருத்தி அமைப்பு [ரெஸ்டோ] (TESDO - Thambiluvil Economic, Social Development Organization) வின் ஏற்பாட்டில் 2017.10.08 ஞாயிற்றுக்கிழமை இன்றையதினம் காலை 6.30 ஆரம்பமாகி 9.30 மணி வரை நடைபெற்ற மாபெரும் கிராமத்தை சுத்தம் செய்வோம் (Lets Clean Up The Village) நிகழ்வானது TESDO (ரெஸ்டோ) அமைப்பின் தலைவர் வைத்திய அதிகாரி டாக்டர் M.மோகனகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது தம்பிலுவில் ஸ்ரீ களுதாவளை பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி திருக்கோவில் கத்தோலிக்க தேவாலய முன்றலில்
நிறைவுற்றது. மேலும் இந்நிகழ்னை சிறப்பிக்கும் முகமாக கிழக்கு மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் முருகானந்தம் அவர்களும் கலந்து சிறப்பித்தார்
மேலும் இந்நிகழ்வில் TESDO (ரெஸ்டோ) நிர்வாகசபையினர் மற்றும் அங்கத்தவர்கள், உறுப்பினர்கள், நலன்விரும்பிகள், சமூக சேவகர்கள், திருக்கோவில் பிரதேச சபை ஊழியர்கள், திருக்கோவில் வைத்தியசாலை ஊழியர்கள், திருக்கோவில் பிரதேச செயலக ஊழியர்கள் , பொது அமைப்பினர், தன்னார்வ இளைஞர்கள் , ஆலய நிர்வாகசபையினர், மற்றும் பலரும் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது தம்பிலுவில் ஸ்ரீ களுதாவளை பிள்ளையார் ஆலயம் தொடக்கம் திருக்கோவில் கத்தோலிக்க தேவாலயம் வரை பிரதான வீதியின் இருமருங்கிலும் காணப்பட்ட குப்பைகள்யாவும் வெளியேற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வின் போது தம்பிலுவில் ஸ்ரீ களுதாவளை பிள்ளையார் ஆலயம் தொடக்கம் திருக்கோவில் கத்தோலிக்க தேவாலயம் வரை பிரதான வீதியின் இருமருங்கிலும் காணப்பட்ட குப்பைகள்யாவும் வெளியேற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!