
[NR]
விநாயகபுரம் அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் 2017ன் தீமிதிப்பு நிகழ்வானது வெள்ளிக்கிழமை 08.09.2017 திகதி இன்று காலை சுமார் 9.30 மணியளவில் பக்த அடியார்கள் சூழ பக்தர்களின் அரோகரா கோசத்துடன் தீ மிதிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் சுமார் 200 மேற்பட்ட அடியார்கள் தீமிதிப்பில் ஈடுபட்டனர்.
நேற்றையதினம் 07.09.2017 திகதி வியாழக்கிழமை நோற்ப்பு கட்டுதல் மற்றும் இரவு 7.30 மணிக்கு விநாயகபுரம் ஶ்ரீ சிவன் ஆலயத்தில் இருந்து தீக்கட்டைகள் கொண்டுவரப்பட்டு தீ மூட்டப்பட்டு , இரவு சக்தி வாங்கலுடன் 5ம் நாள் திருச்சடங்கு பூஜையும் இடம்பெற்று இன்றையதினம் 08.09.2017 திகதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு மஞ்சள் குளித்தலும் இடம்பெற்று தீ மிதிப்பு இடம்பெற்று விசேட பூஜை வழிபாடும் இடம்பெற்றது.



































Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!